Posts

Showing posts from July, 2022

நகைச்சுவை மன்னன் சார்லி சாப்ளின் கூறிய 25 தத்துவங்கள்

1 இந்த உலகில் எதுவும் நிரந்தரமில்லை, உங்கள் பிரச்சினைகள் உட்பட. 2 சிாிக்கத் தவறும் ஒவ்வொரு நாளும் பயனற்றது. 3 சிரிப்புதான் வலிக்கு மருந்து! சிரிப்புதான் வலிக்கு நிவாரணம், சிரிப்புதான் உன் வலியை தீர்த்துவைக்கும். 4 கனவுகள் எல்லாம் நனவாகும். நிறைய காயங்களுக்குப் பிறகு. 5 உன் மனம் வலிக்கும் போது சிரி. பிறர் மனம் வலிக்கும் போது சிரிக்க வை…! 6 இதயம் வலித்தாலும் சிரி. அது உடைந்தாலும் சிரி. 7 என் வலி சிலருக்கு சிரிப்பைத் தரலாம். ஆனால், நிச்சயம் என் சிரிப்பு யாருக்கும் வலியைத் தராது. 8 எனக்கு நிறைய பிரச்சினைகள் உண்டு, ஆனால் என் உதட்டுக்கு அதெல்லாம் தெரியாது. அது சிரித்துக்கொண்டுதான் இருக்கும். 9 பணம் நமக்கு எல்லாவற்றையும் கொடுக்கலாம். ஆனால் வறுமை நம்மிடம் இருந்து பறித்த சிலவற்றை பணத்தால் திருப்பி தர முடியாது. 10 கண்ணாடி என் நண்பன் ஏனென்றால், நான் அழும்போது அது சிரிப்பதில்லை. 11 ஆசைப்படுவதை மறந்து விடு. ஆனால், ஆசைப்பட்டதை மறந்து விடாதே. 12 உன் வேதனை பலரை சிரிக்க வைக்கலாம். ஆனால், உன் சிரிப்பு ஒருவரைக் கூட வேதனைப்படுத்தக் கூடாது. 13 போலிக்கு தான் பரிசும் பாராட்டும். உண்மைக்கு ஆறுதல் பரிசு மட்டும...